உச்சத்தை தொட்ட தங்கம்…
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பது சாதாரண மக்களை கலங்க வைத்திருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவு கூறப்படுகிறது. அந்த அமைப்பின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்த கருத்துகள் காரணமாக தங்கம் ஒரு அவுன்ஸ் 2152 டாலர் என்ற அளவில் விற்கப்படுகிறது.
தங்கம் விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருவது சந்தைகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 4 வேலை நாட்களில் மட்டும் தங்கம் விலை 5 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. சர்வதேச காரணிகளும், அமெரிக்க மத்திய வங்கியின் தரவுகளில் மாற்றமில்லாதததும் தங்கத்தின் விலையை கிடுகிடுவென உயர்த்தி இருக்கிறது. வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் வாய்ப்பு 65 விழுக்காடு இருப்பதால் இந்த மாற்றத்தை தங்கம் சந்தித்து வருகிறது.
MCx April gold futures பங்குகளை 65,100 ரூபாய் என்ற அளவில் வாங்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் என்பது 64,800ரூபாயில் இருக்கலாம் என்றும், பிரைஸ் டார்கெட் 65,500ரூபாயாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இதேபோல் MCX MAY SILVER futuresபங்குகளை 74100 ரூபாயில் வாங்கலாம் என்றும் 73,100ரூபாயில் ஸ்டாப் லாஸ் இருக்கலாம் என்றும், அதேபோல் பிரைஸ் டார்கெட் 76,100 ரூபாயாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.