57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..
செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 100 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து 102 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1லட்சத்து2 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 85,571 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37புள்ளிகள் குறைந்து 26,179 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முதல் பாதியில் ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இரண்டாவது பாதியில் விற்பனையில் கவனம் செலுத்தியதால் பெரிய சரிவைக் கண்டன. BPCL, Cipla, Sun Pharma, Coal India,Reliance Industries
ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன. இதேபோல் Power Grid Corp, Bharti Airtel, HDFC Bank, ICICI Bank, Kotak Mahindra Bank ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகம், ஆட்டோமொபைல் , மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள்0.3 முதல் 2.5 விழுக்காடு வரை உயர்ந்த நிலையில், வங்கிகள், எஃப்எம்சிஜி , ரியல் எஸ்டேட், ஊடகம், டெலிகாம் உள்ளிட்ட துறை பங்குகள்(03-1%) சரிவை சந்தித்தன. Aditya Birla Fashion, Apollo Hospitals, Bajaj Auto, Bajaj Finserv, Balrampur Chini, B mbay Burmah, Bosch, BPCL, Britannia Industries, Ceat, Colgate Palmolive, Eicher Motors, EID Parry, HCL Technologies, Hindalco Industries, ITC, Jindal Saw, JSW Steel, Lakshmi Machine, Lloyds Metals, M&M, NALCO, Nestle India, NTPC, PCBL, Pidilite Industries, Praj Industries, Shriram Finance, Sun Pharma, Tata Power, TVS Motor, UltraTech Cement, Vedanta, Welspun Corp உள்ளிட்ட 285 நிறுவன பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன.