மீண்டும் ஆட்டம் போடும் தங்கம் விலை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 63 ஆயிரத்து 760ரூபாயாக விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை 640ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 30ரூபாய் விலை உயர்ந்து 7 ஆயிரத்து 970 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றிகிராம் 108 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ1லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி, மற்றும் கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தங்கம் விலை இப்படி இருக்கையில் இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று காலையில் கடும் சரிவு இருந்தது. பின்னர் இரண்டாவது பாதியில் சரிவில் இருந்து இந்திய சந்தைகள் மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்து 75 ஆயிரத்து 967 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 22 ஆயிரத்து 945 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மிட்கேப் 0.2 விழுக்காடும், ஸ்மால் கேப் வகை பங்குகள் 1.7 விழுக்காடு சரிந்தும் வணிகத்தை முடித்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் கலவையான போக்கு நிலவியதால்தான் இந்திய சந்தைகளிலும் அது பிரதிபலிக்கிறது. Tech Mahindra, Wipro, ONGC, Power Grid, NTPC ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Trent, IndusInd Bank, M&M, UltraTech Cement, Bharat Electronics ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. Carborundum Universal, Swan Energy, Data Patterns, Sun Pharma Advanced, Mishra Dhatu Nigam, KIOCL, Birla Corp, Natco Pharma, MMTC, BEML, BHEL, Tanla Platforms, JBM Auto, AU Small Finance, Elgi Equipments, Sterling Wilson,உள்ளிட்ட 780 நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன.