புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..

இந்தாண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,300 முதல் 3,400 அமெரிக்க டாலர்கள் வரைதொட்டுவிடும் என்று அமெரிக்க நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் கோல்ட்மென் சாச்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை 4,500 டாலர்கள் கூட தொட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 3 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. பதிலுக்கு பதில் வரி இன்று அமலாகும் நிலையில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு தங்கம் கடந்த காலாண்டில்தான் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்து வருகிறது. உலகளவில் சமநிலையற்ற சூழல் வரும்போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே அதிக கவனத்தை செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் தங்க வருங்கால பங்குச்சந்தைகளான காமெக்ஸில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,164 அமெரிக்க டாலர்களாக விற்கப்படுகிறது. ஸ்பாட் கோல்ட் 3,135 டாலர்களாகவும் உள்ளது. ஓராண்டில் மட்டும் இது 20 விழுக்காடு ஏற்றத்தை சந்தித்துள்ளது. அமெரிக்க கிடங்குகளில் மட்டும் 43.3மில்லியன் அவுன்ஸ் தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் வெறும் 17.1 மில்லியன் அவுன்ஸ் அளவுக்கு மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அமெரிக்க கடன் நிலை சீராகசூழல் காரணிகளால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. வியாபாரத்தில் பெரிய லாபம் இல்லாத நிலையில், அதிக விலை கொடுத்து தங்கம் வாங்க பொதுமக்கள் பலரும், ஏன் முதலீட்டாளர்களிலேயே சிலரும் முன்வர தயங்குகின்றனர்.