எட்டாத உயரத்தில் தங்கம்..

உலக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சர்வதேச அளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் முதல் முறையாக 3 ஆயிரத்து 100 ரூபாயை கடந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களின் கவனம்தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. ஸ்பாட் கோல்ட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு அவுன்ஸ் 3,106 டாலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. உலகளாவிய மற்றும் பொருளாதார சிக்கல்களால் தங்கம் இத்தனை பெரிய சிக்கல்களை சந்தித்து வருகிறது. உலகளவில் பல வங்கிகளும் தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் அதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை 3 ஆயிரத்து 300 டாலர்கள் என்ற புதிய உச்சம் தொடவும் வாய்ப்புள்ளதாக பிரபல நிறுவனங்களான கோல்ட்மேன் சாச்ஸ், அமெரிக்க வங்கி மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், தொடர்ந்து வரிகளை உயர்த்தி வரும் டிரம்ப், வணிக குறைபாடுகளையும் சரிசெய்து வருகிறார். நாளை முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் ஆட்டோ உதிரி பாககங்களில் 25விழுக்காடு கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. மத்திய வங்கிகளும் அதிகளவில் தங்கத்தை ஆர்வமாக வாங்கும் நிலையில், வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்..