கொக்ககோலாவுடன் பேச்சுவார்த்தை..
இந்தியாவில் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனமான ஜூபிலன்ட் குழுமத்தைச் சேர்ந்த பார்தியா குடும்பம், கொக்க கோலா நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பார்தியா குடும்பத்தைச் சேர்ந்த ஷியாம் மற்றும் ஹரி பார்தியா இருவரும் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இந்துஸ்தான் கொக்க கோலா நிறுவனத்தில் 40 விழுக்காடு பங்குகளை வாங்க இந்த நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்துஸ்தான் கொக்க கோலா நிறுவனம் என்பது உலகளவில் 5 ஆவது பெரிய கொக்க கோலா நிறுவனமாகும். இந்த டீலில் கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம் நிதி அளிக்க இருக்கிறது. 3 ஆயிரம் முதல் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஈக்விட்டி வகையில் பணிகள் நடக்கின்றன. இதற்கு நிகரான பணத்தை பார்தியா குழுமமும் தரும் என்று கூறப்படுகிறது. 20% திரும்ப வரும் உள் பணமான IRR சந்தை மூலதனத்துடன் கோல்ட்மேன் சாச்ஸ், முதலீடு செய்ய உள்ளது. பெப்சி நிறுவனம் எப்படி தனது செயல்பாடுகளை இந்தியாவில் செய்கிறதோ அதே பாணியில் தங்கள் நிறுவனமும் விரிவடைய வேண்டும் என்று கொக்கக் கோலை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதே பாணியில் பெப்சி நிறுவனம் வருன் பீவரேஜஸ் நிறுவனத்துடன் இந்தியாவில் கைகோர்த்துள்ளது. இதனால் வருண் நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. இந்துஸ்தான் கொக்ககோலா நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி 9.2% வருவாய் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 14,021 கோடி ரூபாயாக உள்ளது. இதன் லாபம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடும்போது 247 விழுக்காடு அதிகமாகும்.
இந்துஸ்தான் கொக்க கோலா நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு செலவு செய்து அடுத்த 5 ஆண்டுகளில் பாட்டில் ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைகள் குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைய உள்ளன.
3,500 கோடி ரூபாய் கடனை வங்கியில் வாங்காமல் பார்தியா குடும்பத்தினர் பரஸ்பர நிதியில் இருந்து கடன் பெற திட்டமிட்டுள்ளது.