வரியை குறைத்தது அரசு….
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய்க்கான விலையும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு டன் கச்சா எண்ணெய்க்கான விலையாக 10ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது இது இனி 8 ஆயிரம் ரூபாயாக குறையும்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதை அடுத்து இந்த வரியை மத்திய அரசு குறைத்துள்ளது, இதன் மூலம் ரிலையன்ஸ், நயாரா நிறுவனங்கள் பயனடைய உள்ளன.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் எனப்படும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகம் என எண்ணெய் நிறுவனங்கள் கருதிய நிலையில் 5 கட்ட ஆலோசனை நடத்தி அடுத்தடுத்த காலகட்டத்தில் விலை சரி செய்யப்பட்டது தற்போது விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.