22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

விண்ட்ஃபால் வரியை குறைத்த அரசு..

பெட்ரோலிய பொருட்கள் மீதான விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை குறைத்துள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு இந்த வரி 2ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இனி இது ஆயிரத்து 700 ரூபாயாக குறைந்திருக்கிறது.
இந்த விலை குறைப்பு உடனடியாக அதாவது ஜனவரி 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. சிறப்பு கூடுதல் கலால் வரியாக இந்த வரி வசூலிக்கப்படுகிறது. அதாவது உள்ளூரில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்க்கான இந்த வரி ஒரு டன்னுக்கு ஆயிரத்து 300 ரூபாயாக இருந்தது. இது கடந்த 2 ஆம் தேதி 2 ஆயிரத்து 300ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது குறைந்திருக்கிறது. கடந்த 2022 ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் விண்ட்ஃபால் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளுக்கு ஏற்றுமதி வரி 6 ரூபாயாக இருந்தது. டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயாக இருந்தது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை இந்த விண்ட்ஃபால் வரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போதெல்லாம் 75 அமெரிக்க டாலர்களுக்கு மேல் செல்கிறதோ, அப்போதெல்லாம், உள்நாட்டு உற்பத்தி கச்சா எண்ணெய் விலைகளுக்கு இந்த விண்ட்ஃபால் வரி விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *