பங்குச்சந்தையில் வளர்ச்சி,
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 4 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து 73,872 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 22,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் NTPC, HDFC Life, PowerGrid Corp, ONGC, Bharat Petroleum Corpஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Eicher Motors Ltd, JSW Steel, SBI Life, Mahindra & Mahindra, Britannia Industriesஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 1.8 விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.5விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5930 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 47ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, 77 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 77ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.