மின்சார வாகனத்துக்கு ஜிஎஸ்டி உயர்வா?
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் வாங்கினால் அதற்கு மானியத்துடன் கூடிய ஜிஎஸ்டியாக 5 % வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கார்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு எதிர்விணையாற்றியுள்ள மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம், ஜிஎஸ்டி வரி உயர்வுஇருக்குமானால் அது முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளது. மேலும் விற்பனையிலும் பெரிய தாக்கம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு கார்கள் குறிப்பாக மின்சார கார்களுக்கு 110 விழுக்காடு வரி செலுத்தப்படுகிறது என்றும், மேற்கொண்டு ஜிஎஸ்டியையும் உயர்த்தினால் சொகுசு கார்கள் விற்பனை கடுமையாக விழுந்துவிடும் என்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் ஐயர் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும் இந்த முடிவை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.