ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..
உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய டெக் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை மீண்டும் எடுத்து வருகின்றனர். அதன் ஓர் பகுதியாக, கேம்பஸ் இன்டர்வியூ அதிகம் நடத்தி ஆட்களை சேர்த்து வருகின்றனர். டிசிஎஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர புதிதாக தங்கள் நிறுவனத்தில் சேர்த்துள்ளது. SAP, AI போன்ற துறைகளில் அமோக வரவேற்பு இருக்கிறது. முதல் பாதி ஆண்டில் அந்நிறுவனம் 11, 000 பேரை டிசிஎஸ் புதிதாக பணியில் சேர்த்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தில் 2ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் இரண்டாவது காலாண்டில் சேர்ந்துள்ளனர். 2025 நிதியாண்டில் 20,000புதுமுகங்கள் சேர இருக்கின்றனர். மற்றொரு டெக் நிறுவனமான விப்ரோவும் நடப்பு நிதியாண்டில் புதிதாக 12 ஆயிரம் பேரை பணியில் சேர்க்க இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த திறனுக்கு அதிக வரவேற்பு உள்ளது. Ai, மெஷின் லர்நினிங் உள்ளிட்ட துறைகளில் தான் அதிக ஆட்கள் தேவைப்படுகிறது. பெருந்தொற்றுக்கு பிறகு நிலவி வந்த மந்த நிலை முடிந்து மீண்டும் ஆட்சேர்ப்பு நடப்பது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.