பர்சனல் லோன் வட்டி மாற்றம் கவனித்தீர்களா…
சில வங்கிகள் வாகனம் மற்றும் தனிநபர் கடனின் வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கின்றன என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகியிருக்கிறது. marginal cost of lending rates எனப்படும் MCLR விகிதம் ஒவ்வொரு வங்கிகளும் முக்கியமானதாகும்.இது ரிசர்வ் வங்கிவெளியிடும் ரெபோ வட்டி விகிதத்தில் அடங்கும். இது கடந்த பிப்ரவரியில் இருந்து மாறாமல் இருக்கிறது.
ரெபோ வட்டி விகிதத்ததுடன் இணைந்த வீட்டுக் கடன்களின் ஈ.எம்.ஐ. உயர்ந்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி வாகனக் கடன்களை 8.65%என்ற விகிதத்தில் அளித்து வந்தது. இது தற்போது 8.85%ஆக உயர்ந்திருக்கிறது. பரோடா வங்கியில் தனிநபர் கடனின் விகிதங்கள் 8.7-ல் இருந்து 8.8%ஆக வட்டி விகிதம் உயர்ந்திருக்கிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி கர்நாடகா வங்கியும் வட்டி விகதங்களை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரா வங்கி தனது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை 8.5 விழுக்காட்டில் இருந்து 8.35%ஆக குறைத்திருக்கிறது. பணப்புழக்கம் என்பது இந்திய வங்கித்துறையில் கடந்த சில மாதங்களாக பற்றாக்குறையாக இருக்கிறது. இதன் அளவு 2.27 டிரில்லியன் ரூபாயாக இருக்கிறது. இது கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள உச்சபட்ச அளவாகும்.