சிங்கப்பூரில் கால்பதிக்கும் எச்டிஎப்சி வங்கி..
இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றாக எச்டிஎப்சி வங்கி சிங்கப்பூரில் கிளையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான உரிமத்துக்காக அந்நாட்டில் HDFCநிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கடந்தாண்டு HDFC-HDFCவங்கி இணைப்பு நடந்த நிலையில் அடுத்தகட்டமாக உலகளவில் வளர்ச்சி அடையும் நோக்கில் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.எனினும் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லையாம்.
சேமிப்பு, டெபாசிட்கள், அடகு கடன்களை அதிகரிக்கும் வகையில் புதிய லைசன்ஸ்க்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. 60லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் சிங்கப்பூரில் அதிக இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். தற்போது வரை இந்தியாவில் இடம் வாங்குவதற்கான ஆலோசனையை மட்டுமே எச்டிஎப்சி வங்கி சிங்கப்பூரில் அளித்து வருகிறது.
முழு வங்கி உரிமம் பெற ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை தகுதியான என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எச்டிஎப்சியின் முயற்சி கவனம் பெற்றுள்ளது. முழு வங்கி உரிமம் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதைப்போலவே சிங்கப்பூரிலும் ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளை வழங்க முடியும்.
சிங்கப்பூர் மட்டுமின்றி ஹாங்காங், பஹ்ரைன், லண்டனிலும் எச்டிஎப்சி இருப்பை உறுதி செய்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாத கணக்குப்படி இந்தியாவில் எச்டிஎப்சிவங்கி நிறுவனத்துக்கு 9 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.