HDFC வீட்டுக்கடனுக்கு EMI உயர்கிறது
HDFC, வீட்டுக் கடன்களுக்கான சில்லறை முதன்மை கடன் விகிதத்தில் (RPLR) கால் சதவீத உயர்வை அறிவித்துள்ளது. புதிய கட்டணம் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எச்டிஎப்சி தெரிவித்துள்ளது.
RPLR இன் அதிகரிப்பால் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் அதிக EMI செலுத்துவர் என்றும்
நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) 5-10 பிபிஎஸ் வரை உயர்த்துவதாகவும் HDFC அறிவித்தது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மே மாதம் முதல் ரெப்போ விகிதத்தை அதிகரித்து வருவதால், நிதி நிறுவனங்கள் தங்கள் கடன் விகிதங்களை தீவிரமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களில் ரெப்போ விகித உயர்வுகள் ஒட்டுமொத்தமாக 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளன, இது ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு மிக உயர்ந்ததாகும்.