வருகிறது பொதுவான ஒரே கேஓய்சி முறை…
டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதாவது ஏதோ ஒரு நிறுவனமோ,வங்கிக்கோ உங்கள் வணிகம் சார்ந்த அடிப்படையான தகவல்கள் அளிக்க வேண்டுமெனில் ஒருவொரு முறையும் உங்கள் தகவல்களை தரும் நிலை தற்போது உள்ளது. இதனால் நேர விரையம் அதிகரிப்பதால் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரு முறை தரவேற்றம் செய்யும் முறை விரைவில் வர உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காமன் கேஒய்சி மூலம் எந்த வங்கிக்கும் தரவுகளை அளிக்க முடியும்,இதற்கென பிரத்யேக சென்ட்ரல் ரெபாசிட்டரி என்ற சேமிப்பு அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
இந்த வகை புதிய வசதியால் வங்கிக்கணக்குகள் துவங்குவது,டீமாட் கணக்குகள் துவங்குவது, புதிய முதலீடுகள் செய்வது உள்ளிட்டவை எளிமையாக்கப்பட உள்ளன.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ வசதி மூலம் 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும், இதன் மதிப்பு மட்டும் 6.28 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் வரை முடிந்த நிதியாண்டில் யுபிஐ முறை மூலம் 46 பில்லியன் பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு 84 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளா