22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் 250 மில்லியன் டாலர்களை திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

Hero Electric Vehicles Pvt. Ltd, எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதற்காக சுமார் $250 மில்லியன் நிதி திரட்டலுக்காக, முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டெல்லியை தளமாகக் கொண்ட ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மூலதனத்தை திரட்டுவதற்கான திட்டங்களை மதிப்பீடு செய்து வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த கல்ஃப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஓக்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் தலைமையில் நிறுவனம் ₹220 கோடி திரட்டியது.

விஜய் முன்ஜால் தலைமையில் 1993 இல் நிறுவப்பட்ட ஹீரோ எலக்ட்ரிக் குழுமம் இதுவரை 4,50,000 க்கும் மேற்பட்ட மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 750 க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளது. இது Atria, Flash, Nyx, Optima, Photon மற்றும் Velocity E-Cycle பிராண்டுகளின் கீழ் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் சைக்கிள்களை விற்பனை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *