டேய் whatsapp!!!! எங்களால முடியலடா!!!
இந்தியிவில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மூலம் வாய்ஸ் கால் எனப்படும் சாதாரண அழைப்புகளை மேற்கொள்பவர்களை மட்டுமே கண்காணிக்க முடிகிறது.
ஓடிடி தளங்கள் எனப்படும் ஆப் வழியாக மேற்கொள்ளப்படும் கால்கள் கண்காணிக்கப்படுவது இல்லை, இதனால் குற்ற சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஓடிடி தளங்களை முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
தேவையில்லாத நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில், வாட்ஸ் ஆப், சிக்னல்,டெலிகிராம் பயன்படுத்துவோருக்கு கேஒய்சி வசதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் தருகிறது. இதற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சங்கடம் தெரிவிக்கின்றன.
எனினும் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சிடிஆர் எனப்படும் உரையாடல் பதிவுகளை ஓராண்டு வரை இந்தியாவிலேயே சேமித்து வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 4ஜி சேவை தொடங்குவதற்கு முன்பு சராசரியாக மாதத்துக்கு மக்கள் 1 ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இது 20 ஜிபியாக உயர்ந்துள்ளது .
எனவே பயன்பாடும்,குற்றங்கள் நிகழ்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் ஓடிடி தளங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் கே.ஓய்சி வந்தால் எவ்வளவு பேர் அதற்கு சம்மதிப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.