எந்த பொருட்களுக்கு எல்லாம் 35%ஜிஎஸ்டி?

ஜிஎஸ்டி வசூலிப்பதில் புதிய அளவாக 35 விழுக்காடு என்ற புதிய வரம்பை அமைச்சர்கள் குழு பரிசீலித்து வருகிறது. இந்த 35%ஜிஎஸ்டி வரம்பிற்குள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்கள் வர உள்ளன. மேலே சொன்ன பொருட்களுக்கு தற்போது 28 %ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுவருகிறது. இவற்றை 35%ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் பெருக்கம், பொதுமக்களின் உடல்நலம் சார்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டியாக 35%விதிக்கப்படுவதன் மூலம் அதனை வாங்கும் மக்களின் அளவு குறையும் என்றும், அதே நேரம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலேயே இதற்கான பணிகளை மத்திய அரசு செய்திருந்தாலும் அமைச்சர்களின் பரிசீலனைக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் புகையிலை பொருட்களுக்கு அதிகபட்சமாக 20 %ஜிஎஸ்டி வசூலிக்க அமைச்சர்கள் தெரிவித்தனர். அபாயகரமானது மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் வாங்க விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த வரிவிதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள், சொகுசு கார்கள், பான் மசாலா இதில் அடங்கும். இந்த பொருட்களுக்கு தற்போது வரை 28 %ஜிஎஸ்டி மட்டுமின்றி 11%செஸ் முதல் 290%வரை செஸ் வரி விதிக்கப்படுகிறது. இப்போது வரை இந்தியாவில் 5, 12,18, 28% என 4 வகையான அளவில் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. 35% ஜிஎஸ்டி வரம்பு என்பது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நிலையை பாதிக்கும் பொருட்களான பிளாஸ்டிக், ஜங்க் ஃபுட்ஸ், மின்சார கழிவுகள், இ-சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் மீதும் விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.