குறைந்தபட்ச சம்பளமாக ரூ. ’64 லட்சம்’ நிர்ணயித்த நிறுவனம்
கிரெடிட் கார்டு செயலாக்க நிறுவனமான கிராவிட்டி பேமென்ட்ஸின் CEO டான் பிரைஸ், தனது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் $80,000 (சுமார் ரூ. 64 லட்சம்) என்று கூறியுள்ளார்.
ஒரு ட்வீட்டில், தனது நிறுவனம் ஊழியர்களை அவர்கள் விரும்பும் இடத்தில் வேலை செய்ய அனுமதிக்கிறது என்றார்.
பல ட்விட்டர் பயனர்களால் இந்த ட்வீட் வைரலானது, ஒரு CEO என்ற முறையில் பிரைஸ் தனது ஊழியர்களின் நேரத்தையும் முயற்சியையும் மதிப்பதாகத் தெரிகின்றது என்று அவர்கள் கூறினர்.