பேடிஎம் நிறுவன பணியார்களுக்கு அடிக்குது ஜாக்பாட்..
முறைகேடு புகார்களை அடுத்து வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் உள்ள திறமை மிகு பணியாளர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க நிதிநுட்ப நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. பேடிஎம் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பிரிவில் உள்ள பணியாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளை செய்து வருகின்றன. பேடிஎம் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான போன்பே நிறுவன அதிகாரிகள் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனம் யாரின் ரெஸ்யூமையும் கேட்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரம் மொபி குவிக் நிறுவனம் புதிய நுட்ப பணியாளர்களை தேடி வருகின்றது. இதேபோல் பேங்க் பசார் நிறுவனமும் திறமையின் அடிப்படையில் பணியாளர்களை தேடுவதாக கூறியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு கொண்ட பணியாளர்களை வலைவீசி தேடி வரும் நிதிநுட்ப நிறுவனங்கள்,பேடிஎம் நிறுவன பணியாளர்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனராம். பேடிஎம் நிறுவன பணியாளர்களை தேடி வரும் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. ஸ்டாக் டெவலப்மண்ட், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிர்வாக பிரிவில் அதிக வேலைவாய்ப்புகளுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. சட்டத்துறை, மற்றும் ரிஸ்க் பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே நிதிநுட்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேடிஎம் நிறுவனத்தில் பணியாற்றியதால் மட்டும் அவர்கள் திறமையானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்றும், முக்கியமான பொறுப்பான பணிகளை எந்தளவு தெளிவாக பணியாளர்கள் வேலைபார்க்கின்றனர் என்பதே மிகவும் முக்கியும் என்று ஆலோசனை நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.