ம்ம்… சரி.. சரி…செய்யுங்க!!!.
கடந்த சில மாதங்களாக பெரிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. மூன்லைட்டிங் பிர்சனை
பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் இரண்டாவதாக ஒரு பணி செய்தால் அதற்கு கடும் கண்டனம்
தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் மேலாளரிடம் தெரிவித்துவிட்டு கிக் ஒர்க் எனப்படும் மற்ற பணிகளை செய்துகொள்ள
இன்போசிஸ் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் மூன்லைட்டிங் என்ற வார்த்தையையே குறிப்பிடாமல் gigஒர்க் என்று குறிப்பிட்டுள்ள இன்போசிஸ் நிறுவனம்,
தாங்கள் செய்யும் பணி இல்லாமல் வேறு நிறுவனங்களுக்கு பிற பணிகளை , இன்போசிஸ் நிறுவனத்துக்கு தகவல் அளித்து விட்டு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
பகுதி நேரமாக ஓய்வெடுக்கும் நேரத்தில் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பிட்டுள்ளது.
பகுதி நேர வேலை இன்போசிஸ் வேலையை பாதிக்காத வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்லைட்டிங் வேலை இன்போசிஸ் வேலையை பாதிக்கும்பட்சத்தில் இன்போசிஸ் வேலையை இழக்க நேரிடும் என்றும் அதற்கான திட்டங்களை
விதிகளை இன்போசிஸ் நிறுவனம் வகுத்துள்ளது.