நிஸ்ஸான்-ஹோண்டா இணைப்பால் யாருக்கு சிக்கல்..?

ஜப்பானிய நிறுவனங்களான நிஸ்ஸான்- ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாக அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இந்திய சந்தையில் அந்த கூட்டு நிறுவனத்துக்கு சிக்கல் நிலவுகிறது. இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களின் கார்களின் பங்கு வெறும் 3.5%தான். ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்தியுள்ள நிலையில் இந்த இரு நிறுவனங்கள் கடைசியாகத்தான் பார்டியல் சேர்ந்துள்ளன. நிஸ்ஸான் நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பே மின்சார கார்கள் துறையில் நுழைந்து பின்னர் அதை கைவிட்டது. ஹோண்டா நிறுவனமோ அதை முயற்சி கூட செய்து பார்க்கவில்லை. இந்தியா மாதிரியான போட்டி நிறைந்த சந்தையில் இந்த நிறுவனங்கள் எப்படி தாக்குபிடிக்கும் என்ற அச்சத்தையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த இணைப்பு நடக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து முழுமையாக வெளியேறிய மிட்சுபிஷும் இந்த கூட்டு நிறுவனத்தில் பங்களிக்கும் என்றும் கூறப்படுகிறது. நவம்பர் மாத தரவுகளின்படி ஹோண்டா நிறுவனத்தின் இந்திய சந்தை அளவு 2 விழுக்காட்டில் இருந்து 1.40 விழுக்காடாக சரிந்தது. இதேபோல் நிஸ்ஸான் நிறுவனம் கடந்த 2022-ல் 1.2%ஆக இருந்த பங்களிப்பு தற்போது வெறும் 0.7%ஆக குறைந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் ஆலைகள் உள்ளன. ஹோண்டா நிறுவனத்துக்கு ராஜஸ்தானில்தான் ஆலை உள்ளது. நிஸ்ஸான்-ஹோண்டா நிறுவனங்களின் இணைவால், சந்தையில் இன்னும் போட்டி அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.