ஆக்டிவாவிலும் வந்துவிட்டது இ பைக்..

பைக் உற்பத்தியில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனம் பிரபலமான ஆக்டிவா பைக்குகளில் முதல் மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்டிவா இ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்குடன், Qc1 என்ற மற்றொரு மின்சார பைக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட தூர சீட், மாற்றிக்கொள்ளும் திறனுடைய 2பேட்டரிகள். 1.5 கிலோவாட் திறன்கொண்டவையாக இந்த பேட்டரிகள் உள்ளன. இந்த பைக்குகள் ஒரு முறை சார்ஜ் போட்டால் 102 கிலோமீட்டர் தூரம் செல்லும். 3 விதமான ரைடிங் மோடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன. கியூசி1 ரக இ பைக்ககுள் குறுகிய தூரத்துக்கு பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா இ பைக்கில் இருப்பது போல பேட்டரிகளை கியூசி 1 பைக்கில் கழற்றவெல்லாம் முடியாது. 1.2 கிலோவாட், 1.8 கிலோவாட் என இரு வகைகளில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 80 கிலோமீட்டர் தூரம் இந்த வகை பைக்குகள் செல்லும். இந்த இரண்டு பைக்குகளிலும் சீட்டுக்கு அடியில் சேமிப்பு வசதியும், டைப்சி சார்ஜிங் வசதியும் இடம்பிடித்துள்ளன. விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.