கொளுத்தும் வெயில், சூடுபிடிக்கும் விற்பனை..
இந்தியாவில் வெயில் வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக பொருட்களான ஏசி, ஷாம்புகள், டியோடரன்ட்களின் விற்பனை சூடுபிடித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவிலான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்தது. இந்தாண்டு தங்கள் நிறுவன பொருட்கள் அதிகம் விற்பனையாகும் ஏனெனில் இந்தாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டதாக கொக்க கோலா நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த கோடை காலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் வணிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குளிர்பானங்கள் மட்டுமின்றி ஃபேன், ஏர் கூலர்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு ஏசி விற்பனை 30%வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 45%ஏசி விற்பனை அதிகரித்துள்ளதாகவும், ஃபிரிட்ஜ் விற்பனை 20%உயர்ந்துள்ளதாகவும் கோத்ரெஜ் நிறுவனம் கூறியுள்ளது. அதிகரிக்கும் வெப்ப நிலையால், மக்கள் சோப்புகள், டியோ, பாடிவாஷ் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்க தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வகையிலான பட்ஜெட் அம்சங்களால் கடந்தாண்டுகளைவிட இந்தாண்டு 10.6%வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோக பொருட்களை அதிகம் வாங்குவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
