எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர். அதேபோல் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் உயர்வுடன் இருந்தன. இன்றைய நிலவரம் படி நிஃப்டி 17,624 புள்ளிகள் என்ற நிலையிலும் சென்செக்ஸ் 59 ஆயிரத்து 28 புள்ளிகள் என்ற நிலையில் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 6.5 பில்லியன் டாலர் அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர்.மற்றொருபுறம் தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,725 ரூபாய் என்ற நிலையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5, 127 ரூபாய் என்ற நிலையிலும் இருக்கின்றன. ஒரு கிராம் வெள்ளியின் விலை 58 ரூபாய் 80 காசுகளிலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 58 ஆயிரத்து 800 ரூபாய் என்று நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.