உங்ககிட்ட எவ்வளவு தங்கம் இருக்கு??? நீங்க வாங்கினீங்களா??
இந்தியர்களுக்கும் தங்கத்துக்குமான பந்தம் ரத்தமும் சதையுமானது போன்றது. இந்தியாவில் கடந்த காலாண்டில் அரசாங்கமும் தனிப்பட்ட பொதுமக்களும் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வைத்துள்ளார்கள்.உலக தங்க கவுன்சில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலகளவில் தங்கத்தின் தேவை 28 விழுக்காடு உயர்ந்துள்ளதாக
கூறியுள்ளது அதாவது 1,181 மெட்ரிக் டன் தங்கம் தேவைப்படுகிறது. என்கிறது உலக தங்க கவுன்சில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் தேவை 18 %உயர்ந்துள்ளதாக கூறும் அந்த அமைப்பு, இந்த அளவு கடந்தாண்டு முதல் 9 மாதங்களுக்கு இருந்த தேவையைவிட பலமடங்கு அதிகம் என்கிறது கோல்ட் கவுன்சில்.பொதுமக்களுக்கு போட்டியாக தற்போது தங்கத்தை அரசாங்கம் மற்றும் அரசு வங்கிகளே வாங்கிக் கொளளத் தொடங்கியுள்ளன எளிதாக பணமாக மாற்ற முடியும் என்பதாலும், பிரச்சனைகள் வரும் போதும் எளிதாக விற்க முடியும் என்பதாலேயே பரவலாக தங்கம் வாங்கும் பழக்கம் உலகளவில் அதிகரித்துள்ளது. கடந்த 3வது காலாண்டில் இந்தியர்கள் 17 விழுக்காடு கூடுதல் தங்கத்தை வாங்கி குவித்துள்ளனர் என்கிறது புள்ளி விவரம். இந்தியாவில் மக்கள் தீபாவளி மற்றும் டிசம்பரில் அதிக திருமணம் நடக்கும் என்பதாலேயே 4வது காலாண்டிலும் தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.