ஆடாத ஆட்டம் போடும் தங்கம் விலை..எவ்ளோ உயரும்?
இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை கிட்டத்தட்ட இரண்டாவது அதிகபட்சத்தை எட்டியது. இதற்கு பிரதான காரணம் அமெரிக்காவில் டாலர்கள் மீதான முதலீடுகள் சரிவுதான். அதே நேரம் அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி கடன்கள் மீதான வட்டியை குறைப்பதும்தான். இந்த காரணிகளால் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 580 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 2.52% உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2.87% தங்கம் விலை அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பில் வீழ்ச்சி, அதே நேரம் அமெரிக்க கடன் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், உக்ரைனில் தொடர்ந்து வரும் போர், அமெரிக்கா சீனா இடையேயான நட்புறவு மோசமடைவதும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலர் வரை கூட செல்ல வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். குறைந்தபட்சம் ஒரு அவுஸ் அடுத்தாண்டில் 2,700 அமெரிக்க டாலர்களாகவும் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகள் பெரும்பாலும் பங்குச்சந்தைகளில் உள்ள சரிவின் தாக்கமாகவே நடப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்பதில் மாற்றுக் கருத்து நிச்சயம் இல்லை.