கைகொடுத்த தங்கம் கையிருப்பு

இந்திய ரிசர்வ் வங்கி அதிகளவில் தங்கம் வாங்கி வைத்துள்ள நிலையில் அது வெளிநாட்டு பண கையிருப்பை அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணத்தை முதலீட்டாளர்கள் வெளியில் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தங்க கையிருப்பு இந்தியாவுக்கு உதவி வருகிறது. கடந்த 2017 முதல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்தக்தை வாங்கி குவித்து வருகிறது. பெருந்தொற்று நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வெளிநாட்டு பண கையிருப்பை உறுதி செய்யவும் ரிசர்வ் வங்கி இந்த பணிகளை செய்து வருகிறது. 2024-25 நிதியாண்டின் தொடக்கம் முதல் கடந்த 15 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் வெலிநாட்டு பண கையிருப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. அதே நேரம் தங்கத்தின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 658 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த மார்ச் 29 முதல் அக்டோபர் 25 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 44.76 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் தங்க கையிருப்பு 866.65 டன்னாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியன் கையிருப்பு 31 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2022-ல் உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளது. இது வரும் ஆண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு கடைசியில் சர்வதேச அளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3,000 டாலர்களாக உயரும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.