பாஸ்ட்டேக் கேஒய்சியை அப்டேட் செய்ய 31 கடைசி நாள்..
பாஸ்ட்டேக் கேஒய்சிகளை வரும் 1ஆம் தேதிக்குள் அப்டேட் செய்துகொள்ளும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள கேஒய்சி வரும் 31 ஆம் தேதியுடன் காலாவதியாகி விடும் என்பதால் இதனை NHAIஅமைப்பு கேட்டுள்ளது. இப்படி கேஒய்சியை அப்டேட் செய்யாவிட்டால் பாஸ்ட் டேக் கணக்குகள் டீ ஆக்டிவேட் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாகனம் ஒரே பாஸ்ட் டேக் என்ற முன்னெடுப்பை ரிசர்வ் வங்கி முன்னெடுத்துள்ளது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. ஒரே வாகனத்துக்கு பல பாஸ்ட் டேக் எண்கள் பெறப்படுவதால் அது ரிசர்வ் வங்கியின் விதியை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. எப்படி அப்டேட் செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.. அதிகாரபூர்வ பாஸ்ட் டேக் இணையதளத்துக்குள் செல்லவும் அதாவது fastag.ihmcl.com என்ற இணையத்திற்குள் சென்று உங்கள் செல்போன் எண்ணுடன் லாகின் செய்யவேண்டும், ஒரு ஓடிபி வரும். அதில் மை புரொபைல் என்ற டேபை திறக்கவும், அதில்கேஒய்சி என்று இருக்கும், அதில் வாகன பதிவெண், வாகன ஓட்டுநர் உரிமம், முகவரி மற்றும் அடையாள அட்டையை பதிவேற்றவும்,ஒறு புகைப்படமும் அவசியம்தேவையான தரவுகளை பூர்த்தி செய்துவிடவும். வங்கி போர்டலில் அப்டேட் செய்வது இப்படித்தான்.. பாஸ்ட்டேகை வழங்கிய வங்கியின் இணையத்துக்கு செல்லவும், வங்கியின் வெப்சைட்டில் லாகின் செய்ததும், பாஸ்ட் டேக் மற்றும் கேஒய்சி என்ற பிரிவு இருக்கும். அதில் வாகன பதிவெண், சான்றுகள், முகவரி மற்றும் புகைப்படம் மற்றும் அடையாள அட்டைகளை நிரப்பிக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான். 5 ஆண்டுகள் வரை பாஸ்டேகின் காலாவதி தேதி இருக்கும், அது சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும்.