பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்ந்து, 82,133 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி219 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 768 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. Bharti Airtel, Kotak Mahindra Bank, ITC, UltraTech Cement, HUL,உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Shriram Finance, IndusInd Bank, Tata Steel, Hindalco, JSW Steel, ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. ஆட்டோமொபைல், வங்கி, டெலிகாம் துறை பங்குகள் 0.5 முதல் 2 % வரை உயர்ந்தன. ரியல் எஸ்டேட், உலோகம், ஊடகத்துறை பங்குகள் அரை விழுக்காடு வரை சரிந்தன அதேநேரம் , KPR Mills, CRISIL, Page Industries, Indian Hotels, Swan Energy, HCL Technologies, Dixon Technologies, Max Healthcare, Infosys, LTIMindtree, EID Parry, Chalet Hotels உள்ளிட்ட 225க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7230 ரூபாயாகவும், ஒரு சவரன் 57,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 101 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.