பணியாளர்களுக்கு பயிற்சி தரும் முன்னணி நிறுவனம்..
இந்தியாவில் வீட்டு உபயோகப்பொருட்களான அன்றாட பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், தனது பணியாளர்களுக்கு டிஜிட்டல் பொருட்களை கையாள்வது எப்படி, தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எப்படி என பயிற்சி அளித்திருக்கிறது. பணியாளர்களுக்கு திறமைகளை வளர்த்தல், தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட அம்சங்களை அந்த நிறுவனம் கற்றுத்தருகிறது.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும், தரவு தனியுரிமை மற்றும் நிர்வாகத்திறனுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன, இந்தியாவில் தங்கள் நிறுவனம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை இந்தியாவில் பெற்றுள்ளதாக இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். விநியோகச் சங்கிலி மற்றும் சந்தை படுத்தலில் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. விலை நிர்ணயம் மற்றும் முடிவெடுக்க உதவுவதில் செயற்கை நுண்ணறிவு தரவுகள் சிறப்பாக இருப்பதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வணிகத்தில் தொடர தொடர்ந்து படித்தல் கட்டாயமாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளே வந்தாலும் வேலைவாய்ப்புகளை அது பாதிக்காது என்றும் மாறாக அது தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள பணியாளர்களுக்கு உதவும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.