லட்சம் கோடி வேண்டும்!!!!
நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 43 நிறுவனங்கள் ஐபிஓகளுக்கு தயாராக செபியிடம் விண்ணப்பித்துள்ளன. எம்கியூர் பார்மா,நவி டெக்னாலஜீஸ், பிகாஜி புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி திரட்ட ஆயத்தமாக உள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021-22ம் நிதியாண்டின் முதல் பாதியில் 25 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு 51 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டினர் ஆனால் நடப்பாண்டில் வெறும் 14 நிறுவனங்கள் மட்டுமே 35,456 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. நடப்பு நிதியாண்டில் எல்ஐசியின் பங்கு மட்டுமே 58 % என்றும் இதன் மதிப்பு 20 ஆயிரத்து 557 கோடியாக உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக டெல்லிவெரி நிறுவனம் 5,235 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.