2 கட்டங்களாக தனியார் மயமாகிறது ஐடிபிஐ வங்கி…
ஐடிபிஐ வங்கி நிறுவனத்தின் 60.72% பங்குகளை விற்க அண்மையில் மத்திய அரசும், எல்ஐசியும் அறிவிப்பாணைகளை வெளியிட்டன. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியை பொதுத்துறையில் இருந்து தனியார் வசம் மாற்ற 2 கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறைக்கு fit and proper என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பின்னர் இதில் தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களை ரிசர்வ் வங்கியும் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகமும் கண்காணிக்க இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் நம்பகத்தன்மை முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
ஐடிபிஐ வங்கியை ஏலமெடுக்க நினைப்பவர்கள் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்க நினைப்பவர்களின் சொத்து மதிப்பு 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட தனியார் வங்கிகள்,வெளிநாட்டு வங்கிகள்,வங்கியில்லாத நிதிநிறுவனங்கள் இந்த ஏலத்தில பங்கேற்க உள்ளனர்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்,தனிநபர்கள் இந்த ஏலத்தில் பயன்படுத்த முடியாது.
5,000 கோடி ரூபாய் நிதி புழக்கம் உள்ள நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்களாவர். இந்திய எல்லையை பகிர்ந்துகொள்ளும் நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க இயலாது..ரிசர்வ் வங்கி மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு உட்பட்டபடி இந்த ஏலம் நடைபெற உள்ளது.