இணைப்பை முடித்த ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..
பிரபல தனியார் வங்கியாக வளர்ந்து வருவது ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..இந்த வங்கி, தனது தாய் நிறுவனமான ஐடிஎப்சி லிமிட்டடுடன் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது. பங்குதாரர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் இந்த இணைப்புக்கு வெற்றிகரமாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இணைப்பின் ஒருபகுதியாக ஒருங்கிணைந்த செயல்பாடுகள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிஎப்சிஃபர்ஸ்ட் வங்கி தற்போது எந்த ஹோல்டிங்கும் இல்லாமல், எந்த பிரமோட்டார்களும் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது. 600 கோடி ரூபாய் மதிப்பில் பணம் ற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகளை கையாளும் நிறுவனமாக ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மாறியுள்ளது. இணைப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐடிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரியான வைத்தியநாதன், கடந்த 2 ஆண்டுகளாக எடுத்த முயற்சி நிறைவடைந்துள்ளதாகவும், இணைப்பின் ஒரு பகுதியாக ஐடிஎப்சி நிறுவனத்தின் 100 பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரருக்கு அதற்கு இணையாக 155 ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் அளிக்கப்பட இருக்கின்றன. அக்டோபர் 10 ஆம் தேதி இதற்கான ரெக்கார்ட் தேதி என்றும் கூறியுள்ளார். இந்த பங்கு ஒதுக்கீடு வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்கு மதிப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை 74ரூபாய் 19 பைசாவாக இருந்தது. இது முன்தின வர்த்தகத்தை விட 0.22% அதிகமாகும். இந்த வங்கிக்கு தற்போது 55,514.39 கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மூலதனம் உள்ளது. நெகட்டிவ் ரிட்டர்ன்ஸ் என்ற வகையில் 23%கடந்த ஓராண்டில் பெறப்பட்டுள்ளது.