ஐடிஎப்சி வங்கியின் நான்காம் காலாண்டு முடிவுகள்..

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4 ஆவது காலாண்டு முடிவுகளில் குறித்து பல்வேறு கலந்துகட்டிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வரிக்கு பிறகான லாபம் என்பது 52 முதல் 60 விழுக்காடாக சரிந்துள்ளது. வட்டி மூலம் கிடைத்த வருவாய் மட்டும் கடந்த காலாண்டில் 4998 கோடி முதல் 5064 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐடிஎப்சி ஃப்ர்ஸ்ட் வங்கியின் லாபத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன, குறிப்பாக சொத்துகளை நிர்வகிப்பதில் குறைகள் உள்ளன.வரிக்கு பிறகான லாபம் 310 கோடி ரூபாயாக இருக்கும் என்று நுவாமா என்ற நிறுவனம் கணித்துள்ளது. நிகர வட்டி மார்ஜின்கள் 6.04விழுக்காடாகா இருக்கும் என்று கூறப்படுகிறது.அந்த வங்கி அளித்துள்ள கடன்கள் 2.38 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் 288 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று மோட்டிலால் ஆஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் 4998 கோடியாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 347 கோடி ரூபாயாக வரிக்கு பிறகான லாபம் இருக்கும் என்று எஸ் செக்யூரிடீஸ் நிறுவனம் கணித்துள்ளது. வட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய் 5ஆயிரத்து 64 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்களும் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் கடைசி காலாண்டில் மோசமான சரிவு இருக்கும் என்றே கணித்துள்ளன. எனினும் அதிகாரபூர்வமான அறிவிப்பை அந்நிறுவனம் இன்று அப்ரல் 26 ஆம் தேதி வெளியிடுகிறது.