ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 2.0 திட்டம்..
2029 ஆம் நிதியாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தர ஐடிஎப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னோடி வங்கியாக மாற்றும் திட்டத்தையும் அந்த வங்கி இலக்காக கொண்டுள்ளது.
மேலும் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை 2029 நிதியாண்டில் எட்டிப்பிடிக்க இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், எம்டியுமான வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். முன்னேற்ற நிதி நிறுவனத்தில் இருந்து வணிக பயன்பாட்டு வங்கியாக மாற்றப்பட்ட இந்த வங்கி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இந்த வங்கி நிறுவனம் சரிவை கண்டன. 2024 நிதியாண்டில் அந்த வங்கி 2947 கோடி ரூபாய் லாபத்தை பதிவிட்டுள்ளது. CASA விகித்தை அந்நிறுவனம் 47%அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐடிஎப்சி நிறுவனத்தின் இணைப்பு நடந்தது. இதனால் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரட்டிப்பானது. 37.6 ரூபாயாக இருந்த பங்குகள் கடந்த மார்ச் மாதம் 75.4 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதேபோல் அந்த வங்கியில் முதலீடுகள் 38,455 கோடி ரூபாயில் இருந்து தற்போது 1.93லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ரீட்டெயில் முதலீடுகள் என்பது 10,400கோடி ரூபாயில் இருந்து 1.51லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கிரிடிட்-டெபாசிட் விகிதம் என்பது 98.4%ஆக சரிந்திருக்கிறது. முறைப்படி வாங்கப்பட்ட பணம் 61,342 கோடி ரூபாயை அந்த வங்கி திரும்ப செலுத்தியுள்ளது. அந்த வங்கியின் வாராக்கடன் 2.43%-ல் இருந்து 1.89%ஆக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் அளவு 1.27%இல் இருந்து 0.60%ஆக சரிந்துள்ளது. ஐடிஎப்சி வங்கியின் நிகர சொத்துமதிப்பு 32,161 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செயற்பாட்டு லாபம் என்பது 2019-ல் 749 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது 6,030 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2019-ல் 1944 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருந்த நிறுவனம் 2024 நிதியாண்டில், 2957 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.