ஐடிஎப்சி இணைப்பு ஒப்புதல்..
இந்தியாவில் சட்டரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதில் தேசிய சட்ட தீர்ப்பாயம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் ஐடிஎப்சி நிறுவனத்துடன் அதன் நிதி ஹோல்டிங்க்ஸ் கம்பெனியையும் இணைக்க தேசிய சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐடிஎப்சி நிறுவனத்துடன் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியை இணைக்க கடந்த மே மாதம் பங்குதாரர்கள் அளித்தனர். இந்த முடிவுக்கு கடந்தாண்டு டிசம்பரில் ஐடிஎப்சி வங்கி இணைப்புக்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்தது. இதேபோல் கடந்தாண்டு ஜூலையில் ஐடிஎப்சி பினான்சியல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், ஐடிஎப்சி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் இணைய இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தனர். ரிவர்ஸ் மெர்ஜர் பிளான் என்ற திட்டத்தின்படி, வங்கியில் 100 பங்குகள் வைத்திருக்கும் நபர்களுக்கு ஐடிஎப்சி பங்குகள் 155 கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் முகப்பு மதிப்பு தலா 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஐடிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி உரிமம் அளித்தது. 2018-ல் ஐடிஎப்சி வங்கி மற்றும் கேபிடல் ஃபர்ஸ்ட் ஆகியவை இணைந்து ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியாக உருவெடுத்தது. புதன்கிழமை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 0.9% குறைந்து 73.02 ரூபாயாக விற்பனையானது.