பணம் கேட்டா யூஸ் பண்ண மாட்டோம்..
உலகமே திரும்பிப்பார்க்கும் நிதி நுட்பமாக யூபிஐ பரிவர்த்தனைகள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணம் வசூலித்தால் அதனை பயன்படுத்த மாட்டோம் என்று 10-ல் 7 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 34 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. லோக்கல் சர்க்கில்ஸ் என்ற அமைப்பு இது தொடர்பாக கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் யுபிஐ மூலம் 16 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன., கடந்தாண்டு பிப்ரவரியில் இந்த அளவு 12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரயில்வே இணையதளமான IRCTCஇணைய பக்கத்தில் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முறையிடப்பட்டுள்ளது. யூபுஐ பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் சிறப்பு வணிக தள்ளுபடி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2022-ல் ரிசர்வ் வங்கியில் ஒரு பரிந்துரை இருந்தது. பின்னர் இது தொடர்பாக ஒரு தெளிவுரையும் அளிக்கப்பட்டது. ஐஆர் சிடிசி இணையதளத்தைப்போலவே பிற பேமண்ட் கேட்வேகளிலும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இவை அனைத்தும் வாடிக்கையாளர்கள் தலையில் வந்து விடிவது குறிப்பிடத்தக்கது.