இந்தியர்களை எச்சரிக்கும் பேராசிரியர்..
ஈக்விட்டி துறையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை இந்தியர்கள் கொண்டுள்ளதாக மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் பட்டாபிராம் எச்சரித்துள்ளார். ஃபினான்சியல் ஃபிரீ என்ற பாட்காஸ்டில் பேசிய அவர், இந்த மாயை மிகவும் மோசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பங்குச்சந்தையில் ஏற்றம் இருந்துகொ ண்டே இருக்கும் என்று மக்கள் நம்பி வரும் நிலையில்,இது போன்ற செயல் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். ஒரு சராசரி முதலீட்டாளருக்கு 50 முதல் 60 விழுக்காடு ஈக்விட்டியே போதுமானது என்று கூறியுள்ள அவர், சந்தையில் வீழ்ச்சி இருக்கும்போது இந்த அளவு இருந்தால் சமாளிக்க முடியும் என்று கூறியுள்ள இவர், தற்போதைய நிலவரப்படி, இந்திய வீடுகளின் சேமிப்புகள்தான் ஈக்விட்டி சந்தையில் உலா வருவதாகவும் கூறினார். கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை 88%ஆக இருந்த சேமிப்புகள், வரும் நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபியில் 116%ஆக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. அதிக ரிட்டன்ஸ் தருகிறார்கள் என்பதற்காக முதலீடு செய்வதை விட, நிரந்தர வருவாய் குறைவாக இருந்தாலும் அதில் முதலீடு செய்யலாம் என்றும் அவர் அறிவுறுத்தியு்ளார். எப்போதெல்லாம் பங்குச்சந்தைகள் உயர்கின்றனவோ,அதன் பிறகு ஒரு பெரிய சரிவு இருக்கும் என்றும் பட்டாபிராம் எச்சரிக்கிறார். சமநிலையே மிகவும் அவசியம் என்றும் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நிலையான வருவாய் இருக்கும்பட்சத்தில், சந்தை விழுந்தாலும் அது உங்களை காப்பாற்றும் என்றும் கூறியுள்ளார்.