இந்தியா, சீனாவில் உற்பத்தி அதிகரிப்பு..
நாடுகளின் நிதி நிலையை பற்றி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் சர்வதேச அமைப்பாக ஐ எம்எஃப் திகழ்கிறது.
இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் உற்பத்தி துறையில் இந்தியா மற்றும் சீனா இடையே போட்டி நிலவுவதாகவும், வளர்ந்த நாடுகளில் உற்பத்தி திறன் குறைந்த நிலையில் இந்தியா மற்றும் சீனாவின்பக்கம் மற்ற நாடுகளின் கவனம் திரும்பியுள்ளதாக அந்த அறிக்கை கூறியது. பொருட்களுக்கு பதிலாக சேவைத்துறையில்தான் அதிக வரவேற்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைத்துறை இடையே சமநிலையை உலக நாடுகள் செய்து வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச நாணைய நிதியத்தின் தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-ல் 7 விழுக்காடாக உள்ளது. 2023-ல் இந்தியாவின் ஜிடிபி 8.2 விழுக்காட்டில் இருந்து இந்தாண்டு 7, அடுத்தாண்டு 6.5விழுக்காடாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு பல நாடுகளின் பொருளாதாரம் மீண்டு எழுந்து 3 விழுக்காடு அளவுக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் சிக்கலாக உள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனாவில் உற்பத்தி துறை சார்ந்த வளர்ச்சி இருப்பது உலகளாவிய உற்பத்தி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது