அதிகரிக்கும் கிரிடிட்கார்டு கடன் நிலுவைத் தொகை..
இந்தியாவில் கிரிடிட் கார்டு வாங்கி பயன்படுத்திவிட்டு அதற்கு பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1.7%ஆக இருந்த கடன்திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை தற்போது மேலும் 0.1%அதிகரித்து 1.8%ஆக உயர்ந்துள்ளது. டிரான்ஸ் யூனியன் சிபில் என்ற தரவில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. வெறும் 0.1 விழுக்காடாக இருந்தாலும் வராத கடனின் விகிதம் அதிகம் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். 2லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இந்த தொகை உயர்ந்துள்ளது, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்த வராத கடன்அளவு 2லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு வரை கிரிடிட் கார்டு வராக்கடன் விகிதம் வெறும் 87,686 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. பாதுகாப்பு இல்லாத கடன் என்ற பிரிவில் கிரிடிட் கார்டு கடன் வங்கிகளுக்கு தேவையில்லாத தலைவலியை உருவாக்கியுள்ளது. 2கே கிட்ஸ்தான் அதிகம் கடன் வாங்கி முழுமையாக செலவு செய்துவிட்டு கடனை திரும்ப செலுத்துவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக 7.5% அளவுக்கு எஸ்பிஐ கிரிடிட் கார்டுகளைத்தான் அதிகம்பேர் ஏமாற்றியுள்ளனர். பெரிய தொகை கொடுத்து கடன் வாங்கிவிட்டு அதனை தவணையில் அடைக்கலாம் என்ற எண்ணம்தான் இந்த வாராக்கடன்களின் வட்டியை எகிற வைக்கிறது. அமெரிக்காவில் இருப்பதைப்போல ஈஎம்ஐ மூலம் பொருட்களை வாங்க வைப்பதற்காக இந்த உத்திகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்கையில், கடந்தாண்டு நவம்பரில் இருந்த பாதுகாப்பற்ற கடன்களின் விகிதம் தற்போது 10%குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன. அதாவது 25%ஆக இருந்த கல்விக்கடன் மற்றும் வாராக்கடன்களில் தற்போது 15 % மட்டுமே வரவேண்டியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.