அதிகம் எண்ணெய் வாங்கும் இந்தியா..
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்புக்கு ஆங்கிலத்தில் OPECஎன்று பெயர் உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கணிப்புப்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என்றும் குறிப்பாக அதிகளவில் வாங்கும் என்றும் அந்த அமைப்பு கணித்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன்இடையேயான போர் ஏற்பட்டபோது ஓபெக் அமைப்புக்கு பதிலாக ரஷ்யாவிடம் இந்தியா அதிக கச்சா எண்ணெய் வாங்கியிருந்தது. அதாவது அந்த ஆண்டில் இந்தியா-ஒபெக் நாடுகளிடம் வாங்கிய கச்சா எண்ணெய் அளவு 50 விழுக்காடு குறைவாகும். இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் ஓபெக் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் பிரதான பங்கு வகிக்கின்றன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அளிப்பது மிகச்சரியான தேர்வாகவும் உள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் இந்தியாவுக்கு ஓபெக் நாடுகள்,54 விழுக்காடு அளவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்திருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகள் குறிப்பாக அடுத்த சில பத்து ஆண்டுகளுக்கும் இதே நிலை தொடரும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஓபெக் நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் இந்திய கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு நாளைக்கு 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தும் பணிகளை இந்தியா 2030-க்குள் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 52லட்சம் பேரல் கச்சா எண்ணெய்தான் இப்போது வரை சுத்தப்படுத்தப்படுகிறது. 2030ஆம் ஆண்டு ஆற்றல் துறையில் இந்தியா 3 ஆவது பெரிய சக்தியாக திகழும் என்றும் ,2030ஆம் ஆண்டு வரை இந்தியா கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் என்றும் சர்வதேச ஆற்றல் முகமை கணித்திருக்கிறது. 2045 ஆம் ஆண்டு இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை தினசரி 1 கோடியே1 7 லட்சம் பேரல் ஆக உயரும் என்றும் ஓபெக் அமைப்பு கணித்திருக்கிறது.