இந்தியா சிறப்பாக செயல்படுகிறது!!!! யார் சொன்னா? நாங்களே சொல்லிக்குவோம்!!!!
உலக பொருளாதார மந்த நிலையிலும் இந்தியா பிரகாசமான ஒரு இடமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலையும்,நிச்சயமும் இல்லாத உலகில் இந்தியா தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு முன்பு இந்திய பொருளாதார வளர்ச்சி 3 விழுக்காடு இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் உள்நாட்டு உற்பத்தி 13.7% ஆக உயர்ந்துள்ளது. இது ஜாம்பவான் நாடுகளைவிடவும் மிகவும் அதிகமாகும்.
பல துறைகள் பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ள போதும், ஹோட்டல், சுற்றுலா உள்ளிட்ட சில துறைகள் இன்னும் மீளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முதலீட்டில் இந்தியா 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், குறிப்பாக கட்டுமானம்,வீட்டுவசதி, ஸ்டீல் மற்றும் மருந்துத்துறை பங்குகள் மிக அதிக முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு கரன்சி கையிருப்பு குறைவதற்கு அமெரிக்க டாலர் விலை மதிப்பு உயர்வதே காரணம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.