இந்த விஷயத்துல உறுதியாக இருக்கும் இந்தியா..
உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்தன. இந்த சூழலில் ரஷ்யாவின் நிலையை தமக்கு சாதகமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவும் ரஷ்யாவும் மிகவும் தோஸ்த் நாடுகள் என்று குறிப்பிட்ட ஜெய்ஷங்கர், இந்தியாவின் விருப்பத்தை எப்போதும் ரஷ்யா நிராகரிப்பது கிடையாது என்று தெரிவித்தார். ஜெர்மனியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு ஜெய்சங்கர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ரஷ்யாவின் மீது ஐரோப்பிய ஒன்றியம் வைத்திருக்கும் பார்வையை இந்தியா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனஅறு தெரிவித்தார். ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் எப்போதும் ஏற்ற இறக்கம் கொண்டதாக கூறப்படும் நிலையில் ரஷ்யாவுடன் மட்டும் இந்தியாவுக்கு எப்போதும் சுமூக உறவு இருப்பதாகவும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார். இதே நேரம் சீனாவுடனான நட்பு மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு என்பது உக்ரைன் போருக்கு பிறகு வலுவடைந்திருப்பதாகவும், அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெயை ரஷ்யாவுக்கு பதிலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி விட்டதாக குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் போது ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்தே பணிகளை செய்ததாக கூறினார். காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.