சர்வதேச பட்டினி குறியீட்டில் பின்தங்கிய இந்தியா…
உலகளவில் பசி,பட்டினியால் வாடுவோர் குறித்த அறிவிப்பு ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு 107வது இடம் கிடைத்துள்ளது.
மொத்தம் 123 நாடுகளின் நிலவரம் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 94வது இடமும், கடந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியா 101வது இடமும் பிடித்திருந்தது. இந்தாண்டு மேலும் 6 இடங்கள் சரிந்து இந்தியா 107வது இடத்துக்கு சென்றுவிட்டது.
இந்த பட்டியலில் இந்தியா வெறும் 29.1மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் சைல்டு வேஸ்டிங் ரேட் என்ப்படும் உணவை வீணாக்கும் அளவு உலகிலேயே அதிகம் என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது
கடந்த 2018- 2020 காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டு அளவு 14.6%ஆக இருந்த நிலையில் , 2019-2021 காலகட்டத்தில் 16.3% ஆக அதிகரித்துள்ளதாகவும் உலகளாவிய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மட்டும் 22 கோடி பேர் போதிய சத்தில்லாமல்இருப்பதாகவும் அதிர வைக்கிறது அந்த புள்ளி விவரம்
உலகிலேயே பெலாரஸ் நாட்டில்தான் பட்டினிவிகிதம் குறைவு என்றும் 17 நாடுகளில் சிறப்பாக உள்ளதாக பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.