லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…
உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தைவானிய நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் டேப்லட் மற்றும் லேப்டாப்களை உற்பத்தி செய்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவே இந்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது
மொத்தம் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஊக்கத் தொகையை இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கத் திட்டமிட்டுள்ளது
இதற்கு தகுதி பெற பெருநிறுவனங்கள் 7 பில்லியன் ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சலுகைகள் கிடைக்க உள்ளது
ஆப்பிள் நிறுவன லேப்டாப்,ஐபோன்கள் இந்தியாவில் தயாராகி வரும் சூழலில் டெல், எச்பி நிறுவனங்கள் ஏற்கனவே சிறிய அளவில் உற்பத்தியை செய்து வருகின்றனர். இதனை இன்னும் பெரியதாக செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீன தயாரிப்பான லெனோவா உற்பத்தி அதிகளவில் உள்ள நிலையில் பிற நாட்டுப் பொருட்கள் அதிகரிக்கப்பட உள்ளது வெளிநாட்டு நிறுவனங்களை உற்சாகப்படுத்தியுள்ளது