டாலரில் தான் பணம் செலுத்துகிறது இந்தியா!!!
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளனர்
இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பல நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் இந்தியா மலிவு விலைக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் போது ரஷ்ய பணத்திலோ இல்லை யூரோவிலோ வாங்க இந்திய அரசு
முன்வந்தது ஆனால் இன்றுவரை அமெரிக்க டாலரிலேயே ரஷ்யாவுக்கு பணம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க டாலரில் பணம் செலுத்துவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வந்தாலும் அந்த பணிகளில் எந்த முன்னேற்றமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை ரஷ்யாவில் இருந்து அதிகபொருட்களை இந்தியா செய்து வரும் காரணத்தால் உலகளவில் இந்திய ரூபாயில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. யூரோவிலோ, திராமிலோ பணத்தை ரஷ்யாவுக்கு அளிப்பதற்கு பதிலாக இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும் என்றே பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய்க்கு உண்டான பணத்தை டாலரில் அளிக்காமல் இந்திய ரூபாயில் அளிப்பது தொடர்பாக நிதியமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்தும் தெரிவிக்கின்றனர்.