5 ஆண்டுகளில் 3-ம் இடத்தில் இந்தியா இருக்கும்….. எதில் தெரியுமா??
சர்வதேச நாணய நிதியம் அமைப்பு உலகின் பல நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்து வருகிறது. அந்த ஆய்வின்படி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்று கணித்துள்ளது
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியபொருளாதாரம் இருக்கும் என்றும் அந்த அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன
முன்னதாக கணித்ததைவிடவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா இந்த நிலையை எட்டிவிடும் என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது
ஜெர்மனி மற்றும் ஜப்பானை மிஞ்சி இந்த இடத்தை இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரிட்டனை இந்தியா இந்தாண்டு பட்டியலில் மிஞ்சிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தனிநபரின் வருவாய் 2 ஆயிரத்து 466அமெரிக்க டாலர்களாக சராசரியாக உள்ளதாகவும், 2027ம் ஆண்டு இது 3,562டாலர்களாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விலைவாசி இந்தியாவில் கடுமையாக உயர்ந்துவிட்டாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை பெரிய அளவில் பாதிக்காததால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது
இதே சர்வதேச நாணய நிதியம் அமைப்புதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பாண்டில் 8.2% இருக்கும் என்று கணித்தது. பின்னர் அதனை 7.4 ஆகவும், அதன் பின்னர் அண்மையில் 6.8%ஆகவும் குறைத்துள்ளது.