உயர்ந்து முடிந்த இந்திய சந்தைகள்..
அக்டோபர் 10 ஆம் தேதியான வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வை சந்தித்தன வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 81,611 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 16.50 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை 24,998 புள்ளிகளில் முடித்தன. Kotak Mahindra Bank, HDFC Bank, Bharat Electronics, Maruti Suzuki, Power Grid Corp, உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வில் முடிந்தன. Cipla, Trent, Tech Mahindra, Sun Pharma,hero MotoCorp உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன. வங்கித்துறை 1%,ஆற்றல்துறை 0.7%, உலோகத்துறை கூடுதலாக 0.3% உயர்ந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை,1%, மருந்துத் துறை பங்குகள் 2%,ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 0.4% விலை குறைந்தன. Apar Industries, Atul, CG Power, Coforge, Dixon Technologies, Dr Lal PathLab, Glenmark Pharma, Gujarat Alkalies, Gujarat Fluorochemicals, HCL Technologies, Hitachi Energy, Ipca Labs, MCX India, Metropolis Healthcare, Page Industries, Polycab India, Symphony, Tech Mahindra, Torrent Pharma, Whirlpool, உள்ளிட்ட 120க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை சவரனுக்கு 40 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை குறைந்து 7ஆயிரத்து25 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 100 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்