உயர்ந்து முடிந்த இந்திய சந்தைகள்..
அக்டோபர் 14 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்592புள்ளிகள் உயர்ந்து 81,973 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 164 புள்ளிகள் உயர்ந்து வணிகத்தை 25,128 புள்ளிகளில் முடித்தன. Wipro, Tech Mahindra, HDFC Life, L&T, HDFC Bank உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வில் முடிந்தன. ONGC, Maruti Suzuki, Tata Steel, Bajaj Finance, Adani Enterprisesநிறுவன பங்குகள் சரிவை கண்டன. உலோகம், ஊடகத்துறை பங்குகளைத் தவிர்த்து அனைத்துத்துறை பங்குகளும் பச்சையில் முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை, ரியல் எஸ்டேட், வங்கித்துறை உள்ளிட்ட பங்குகள் 1 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. Aptus Value, Oberoi Realty, Tech Mahindra, Persistent Systems, Motilal Oswal, NALCO, MCX India, Glenmark Pharma, Ipca Labs, Divis Labs, Apar Industries, HCL Technologies, Coforge, Dixon Technologies, Page Industries, Trent, Mankind Pharma, Gujarat Fluorochemicals, V-Mart Retail உள்ளிட்ட 240க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 14ஆம் தேதி திங்கட்கிழமை மாற்றிமின்றி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து120 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி 103 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.